கோயம்புத்தூர் அரவிந்த் கண் மருத்துவமனை பை னோக்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் அதிநவீன சோம்பேறிக் கண் (அம்பிலி யோபியா) மற்றும் இருவிழி பார்வை கிளினிக்கை திறந்து வைத்தது.
இதற்கான நிகழ்வு கடந்த 7ம் தேதி அரவிந்த் கண் மருத்துவமனையின் குழந்தை கண் துறை, புதிய கட்டிடம் முதலாவது மாடியில் நடைபெற்றது.
இதன் துவக்க விழா அமெரிக்க டாக்டர்கள். ஆர். வி. பால் சான், பீட்டர் மேகிண்டோஷ், டாக்டர் பீட்டர் கேம்ப்பெல், அரவிந்த் கண் மருத்துவமனையின் டாக்டர் நரேந்திரன், டாக்டர் கல்பனா நரேந்திரன் மற்றும் டாக்டர் சாண்ட்ரா கணேஷ் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த சிகிச்சையகம், அம்பி லியோபியா (சோம்பேறிக் கண்), இடைப்பட்ட மாறு கண் மற்றும் டிஜிட்டல் கண் அழுத்தம் கணினி பார்வை நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட, அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி நரேந்திரன், கூறுகையில், “இந்த கிளினிக் அனைத்து வயதான நோயாளிகளி டையே இருவிழி பார்வை கோளாறுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்,” என்றார்.
இதில் குழந்தை கண் மருத்துவம் மற்றும் மாறு கண் துறையின் மூத்த மருத்துவர் கல்பனா நரேந் திரன், வளர்ந்து வரும் அதிநவீன சிகிச்சையை எடுத்துக்காட்டினார்.
பைனாக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஒலியுல்லா அப்தால், சிறந்த பணிக்கு பெயர் பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இந்த சேவையை செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.