fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச கை அறுவை சிகிச்சை சங்கங்களின் தலைவராக கங்கா மருத்துவமனை டாக்டர் தேர்வு

சர்வதேச கை அறுவை சிகிச்சை சங்கங்களின் தலைவராக கங்கா மருத்துவமனை டாக்டர் தேர்வு

கோவை கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக், கை மற்றும் நுண் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எஸ். ராஜா சபாபதி சர்வதேச கை அறுவை சிகிச்சை சங்கங்களின் கூட்டமைப்பின் (IFSSH) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மார்ச் 28-ல் நடைபெற்ற மாநாட்டில் இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சர்வதேச கை அறுவை சிகிச்சை சங்கங்களின் கூட்டமைப்பில் 62 நாடுகளைச் சேர்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்த அமைப்பு, மிகப்பெரிய கை அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமைப்பாகும்.

1966ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, உலகளாவிய கை அறுவை சிகிச்சை முன்னேற்றங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன் 59 ஆண்டுகால வரலாற்றில், இந்த உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் இந்தியர் டாக்டர் ராஜா சபாபதியாவார்.

தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் பேசுகையில், “உலகெங்கும் உள்ள மக்களுக்கு தரமான கை அறுவை சிகிச்சையை வழங்குவதே என் முக்கிய இலக்காகும்” என்றார்.

டாக்டர் ராஜா சபாபதி தலைமையில், கோவை கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையில் உலகளாவிய பயிற்சி மையமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img