கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நான்கு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஐந்தாவது வாரமான நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த இரண்டு வாரங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வில் டிஜே நிகழ்ச்சியில் இல்லாத நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் டிஜே கொண்டுவரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆடிபாடி மகிழ்ந்தனர்.
மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ் என்ற இளைஞர் சங்க தமிழர்களின் வரலாற்றை பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து அடுத்த வாரம் கொடிசியா பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாட் டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.