கோவை கொடிசியா வளாகத்தில் பீல்ட் இன் டெக் 2024 கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற 9ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து கொடிசியா தலைவர் சிவஞானம், செயலாளர் சசிகுமார், 2024 சேர்மேன் சிவகுமார், உதவி சேர்மன் ஐஜி வள்ளல் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்
அப்போது அவர்கள் கூறியதாவது:
கோவை கொடிசியா வளாகத்தில் 13வது பதிப்பாக ஃபீல்டு இண் டெக் 2024 என்ற பெய ரில் கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற 9ம் தேதி தொடங்குகிறது
இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத்_ ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்பட பல் வேறு மாநிலங்கள் பங்கேற் கின்றன. இது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
முன்னதாக, 9ம் தேதி தொடக்க விழா நிகழ்ச்சியில் காலை 10 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறார்.
வருகிற 12ம் தேதி முடிய நடைபெறும் இந்த கண்காட்சியில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன. மேலும் இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்காட்சியின் மொத்த பரப்பளவு 1 லட்சம் சதுர அடி ஆகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.