fbpx
Homeபிற செய்திகள்கோவை சொக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

கோவை சொக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நந்தகுமார் மற்றும் அவருடைய மகள் ஸ்ரீநிதி தங்களுடைய 58.5 சென்ட் நிலத்தை ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனைக்காக வழங்கியதற்கு அவர்களுக்கு நினைவு பரிசினை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கி பாராட்டினார்.

அருகில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், துணைத்தலைவர் பாலகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு (எ) திருநாவுக்கரசு (சொக்கனூர்), செந்தில்குமார் (சொலவம்பாளையம்), சுந்தர்ராஜ் (அரசம்பாளையம்), ரத்தினசாமி (கோதவாடி), ருக்குமணி சிதம்பரம் (ஆண்டிபாளையம்), ராம்குமார் (பொட்டையாண்டிபுரம்பு), தர்மராஜ் (குதிரையாலம்பாளையம்) மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கமலக்கண்ணன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செல்வம் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img