fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கலைக் கல்லூரியில் திருநங்கைகளுக்கான கழிவறை திறப்பு

கொங்குநாடு கலைக் கல்லூரியில் திருநங்கைகளுக்கான கழிவறை திறப்பு

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் திருநங்கைகளுக்கான கழிவறை திறந்து வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, திருநர் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களை ஆசிரியர் மற்றும் அலு வலர் பணிகளில் நியமித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட கழிவறை கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினரும் சமூகப் பணித்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவருமான முனைவர் எப்.எக்ஸ் லவ்லினா லிட்டில் ஃப்ளவர் திறந்து வைத்தார்.

கல்லூரி செயலர் மற்றும் இயக் குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் மா. லச்சுமணசாமி முன்னிலை வகித்தார்.
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருநங்கை பத்மினி பிரகாஷ், அலு வலக உதவியாளர் திருநங்கை சாரா ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img