கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகம், தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவர் மா.ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து “நீர் நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது.
முன்னதாக கருத்தரங்கத்தின் தொடக்கவிழா கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவில், கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.சங்கீதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையுரையாற்றினார்.
இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழக நிலையாற்றல் பொருட்கள் துறையின் பேராசிரி யர் முனைவர் செந்திலரசு சுந்தரம் சிறப் புரையாற்றினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மையர் (வேளாண்மைப் பொறியியல்) முனைவர் A. ரவிராஜ் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் கோயம்புத்தூர் பிரிவின் ஒருங் கிணைப்பாளர் முனைவர் S.பால்சாமி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழக நிலைப் பொருளியல் மையப் பேராசிரியரும் இணை முதன்மையருமான முனைவர் டேவிட் ஹியூஸ் கருத்தரங்க நோக்கவுரையாற்றினார்.
நிறைவில் இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்புச் செயலர் முனைவர் கு.முத்துக்குமார் நன்றி தெரிவித்தார்.