fbpx
Homeபிற செய்திகள்கோவை கே.பி.ஆர் கலைக்கல்லூரியில் முதலுதவி கற்றலுக்கான பயிற்சி முகாம்

கோவை கே.பி.ஆர் கலைக்கல்லூரியில் முதலுதவி கற்றலுக்கான பயிற்சி முகாம்

கோவை கே.பி.ஆர் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், அலெர்ட் மற்றும் கே.பி .ஆர்.கோல்டன் ஆர்மி இணைந்து முதலுதவிக் கற்றலுக்கான 2.5 கே. பயிற்சிமுகாமினை நேற்று நடத்தியது. இந்நிகழ்வில் முதல்வர் முனைவர் பி.கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். ரூட்ஸ் குழுமத்தின் கார்ப்பரேட் இயக்குநர் டாக்டர் எஸ்.சந்திரசேகரன், முதலுதவிக் கற்ற லின் தேவை, அதன் முக்கியத்துவம் குறித்து உரை ஆற்றினார்.

அவரைத் தொடர்ந்து அலர்ட் அறக்கட்டளையின் இணை இயக்குநர் மற்றும் நிர்வாக உறுப்பினர் ராஜேஷ் திரிவேதி, இளம் தலைமுறையினர் முதலுதவிக் கற்றலின் வழியாக நாம் இந்த சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய முக்கியப் பங்குகள் குறித்தும், முதலுதவிப் பயிற்சியினை எவ்வாறு முறையாக கற் றுக்கொள்ள வேண்டும் என்றும், அவசரகாலச் சூழலில் முதலுதவி வழங்கி உயிர் களைக் காப்பாற்றிய கல்லூரி மாண வர்களின் செயல்களை முன்னுதாரணம் காட்டி பேசினார்.

இந்நிகழ்வில் முன்னதாக கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத்துறையின் மூன்றாமாண்டு மாணவி சௌமியா வரவேற்புரை வழங்க, இறுதியில் வணிகவியல் மற்றும் தொழில்முறை கணக்கியல் துறையின் இரண்டாமாண்டு செல்வி அமிர்தா நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு முதலுதவி குறித்த பல்வேறு செயல்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட் டது. இப்பயிற்சி முகாமில் 2500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு பயிற்சி பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img