கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் புல வணிகத் தொழில்சார் கணக்கியல் துறையும், ஆசிய பசிபிக் பல்கலைக்கழகமும், கிறிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக் கழகமும் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.
வணிகத் தொழில்சார் கணக்கியல் துறைத்தலைவர், இணைப் பேரா சிரியர் முனைவர் கார்த்திகா வரவேற்றிட, வணிகவியல் புல முதன் மையர் முனைவர் குமுதாதேவி மாநாட்டின் நோக்கவுரையை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கீதா நிதித்துறையில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் பங் களிப்புக் குறித்துத் தலைமை உரை வழங்கினார். ஏபியு ஃபின்டெக் அகாடமியின் தலைவர் டாக்டர் மீரா ஈஸ்வரன் நிதித் தொழில்நுட்பத்தில் புதுமை குறித்தும், பெங்களூர் கிறிஸ்ட் நிகர் நிலைப் பல்கலைக்கழக வணிகம் நிதி மற்றும் கணக்கியல் பள்ளியின் இயக்குநர் பிஜு டாம்ஸ் மின்னணுக் கணக்கியலில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பேசினார்.
பன்னாட்டு விவகார மையத்தின் தலைவர், இணைப்பேராசிரியர் முனைவர் ஸ்ரீதேவி தொடக்க விழாவிற்கான நன்றியுரை வழங் கினார். தொடாக்க விழாவை அடுத் துக் கருத்தரங்க அமர்வுகள் ரதி சேஷாவின் வரவேற்புடன் தொடங்கின.
நிறைவு விழாவில் துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆர்.வசந்தி மாநாட்டு அறிக்கையை வழங்கிட, கல்லூரியின் முதல்வர் கீதா நிறைவாக பேசினார்.
துறைத்தலைவர் முனைவர் டி.கார்த்திகா நன்றியுரை வழங்கினார். இம்மாநாட்டில் பேராசிரியர்களும், சுமார் 970 மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.