fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்பிஏ வகுப்புகள் தொடக்கம்

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்பிஏ வகுப்புகள் தொடக்கம்

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முது நிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) படிப்புகளுக்கான வகுப்புகள் “எம்ப் லேஸ் 24” என்ற விழாவுடன் தொடங்கப்பட்டது.

கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஈஒய் ஜிடிஎஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் டிஜிட்டல் பொறியியல் தலைவர் கோ பாலகிருஷ்ணா, பைல ஹள்ளி மற்றும் அக்செஞ்சர் நிறுவனத்தின் தரவு அறிவியல் மேலாளர் நிஷாந்த் கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, சிறந்த வணிக மேலாண்மைக்கு வழிவகுக்கும் முறைகளைப் பற்றி கோபாலகிருஷ்ணா பைலஹள்ளி பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய நிஷாந்த் கண்ணா வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்ப வணிக மேலாண்மை சார்ந்த பயன்பாடுகள் பற்றி பேசினார்.
கே பி ஆர் குழுமங்களின் தலைவர் முனைவர் கேபி ராமசாமி எம்பிஏ பட்டதாரிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துத்தார்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
மேலும், இயக்குனர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img