fbpx
Homeபிற செய்திகள்மகேந்திரா பம்ப்ஸ் நிர்வாக இயக்குநருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

மகேந்திரா பம்ப்ஸ் நிர்வாக இயக்குநருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

பவுண்டரி தொழிலின் தேசிய அமைப்பான ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’ (ஐஐஎப்) சார்பில், 74-வது தேசிய பவுண்டரி தின விருது வழங்கும் விழா கோவையில் நடந்தது.

சென்னை ‘இசட்எப்’ ரனே ஆட்டோமொடிவ் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பார்த்திபன் தலைமை வகித்தார். ஐஐஎப் தென்மண்டல தலைவர் முத்துகுமார், கோவை கிளை தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மகேந்திரா பம்ப்ஸ் நிர்வாக இயக்குநர் மகேந்திர ராம்தாஸ்-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த அலுவலருக்கான விருது அம்மரூன் பவுண்டரி ஊழியர் செந்தில்குமார், பசுமை பவுண்டரி விருது கார்கி ஹட்நெஸ் அல்பெர்டஸ் நிறுவனம் உள்ளிட்ட சிறந்த ஏற்றுமதியாளர், சிறந்த சிறு தொழில் நிறுவனம் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

கல்வியில் சிறந்து விளங்கிய பவுண்டரி தொழிலில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கும் பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டனர். ஐஐஎப் கோவை கிளை துணைத் தலைவர் செல்லப்பன், கவுரவ செயலாளர்கள் ஹரிவிஸ்வநாதன், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img