கார்மெண்ட் மந்த்ரா இந்திய மக்களின் நாகரீகம் மற்றும் வாழ்க்கை முறை விருப்பங்களை நிறைவேற்றும் ஜவுளித் தொழில் நிறுவனமாகும். இது திருப்பூரில் அமைந்துள்ளது.
நிறுவனத்தின் முழுமையான ஆடை வரம்பு சுமார் 5,000 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உள்நாட்டு மக்கள் தொகையில் 70%-ஆக இருக்கும் வாடிக்கையாளர்களை தனது இலக்காகக் கொண்டுள்ளது
ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்த கார்மெண்ட் மந்த்ரா லைஃப் ஸ்டைல் லிமிடெட் (GMLL), 31 டிசம்பர் 2023 அன்றுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களில் சிறந்த வருவாயினை அறிவித்துள்ளது.
31 டிசம்பர் 2023 (Cons) அன்றுடன் முடிவடைந்த காலாண் டில், நிறுவனம் தனது செயல்பாடுகளில் இருந்து ரூ.33.36 கோடி வருவாயாக கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 18% வளர்ச்சியாகும்.
அதுபோல, வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்து தல் ஆகிய செலவினங்கள் கழிக்கப்படும் முன் உள்ள வருவாய் (EBITDA) கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 75% உயர்ந்து ரூ.2.80 கோடி யினை எட்டியுள்ளது. வரிக்குப் பிந்தைய வருவாய்(PAT) கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 304% உயர்ந்து ரூ.1.41 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
31 டிசம்பர் 2023 (Cons) அன்றுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில், செயல்பாடுகளில் இருந்து கிடைத்த வருவாயாக ரூ.93.92 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது. இது 9% குறைவாகும்.
வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் ஆகிய செலவினங்கள் கழிக்கப்படும் முன் உள்ள வருவாய் (EBITDA) கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 26% வளர்ந்து ரூ.5.99 கோடியாக உள்ளது. வரிக்குப் பிந்தைய வருவாய் (PAT) கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 99% உயர்ந்து ரூ.2.11 கோடியாக உள்ளது.