சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி முன்னேற்ற அறக்கட்டளை கே.எம்.சி.எச்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சவுரிபாளையம் சிறுமலர்கள் சிறுவர்கள் பள்ளியில் நடத்தப்பட்டது.
மருத்துவ முகாமை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் நா.இளஞ்செல்வி கார்த்திக் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு உறுப்பினரும் 51- வது வார்டு மாமன்ற உறுப்பினர் ம.அம்சவேணி மணிகண்டன், ஸ்ரீ கிருஷ்ணா கலைஅறிவியல் கல்லூரி சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் கே.அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மீனா குமாரி, அரவிந்த், வித்யா, பிரசாத், சௌமியா தலைமையிலான குழுவினர் பொது மருத்துவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் எலும்பு மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இ.சி.ஜி. மற்றும் சர்க்கரை அளவு கண்டறியும் பரிசோதனை இலவசமாக நடத்தப்பட்டது.
முகாமில் 120-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பட்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை சங்கமித்திரா சுற்றுச் சூழல் மற்றும் கல்வி முன்னேற்ற அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வி. கனகேஸ்வரி, நிர்வாக மேலாளர் எஸ். வி.ஸ்நேக பாரதி ,கே. எம். சி. ஹெச் . மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஏ. மணிக் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.