எம்ஜி மோட்டார் இந்தியா, கார் வாங்குபவர்களை மகிழ்விப்பதில் கவனம் செலுத்தியும், அதன் 2024 ரகமாடல்களுக்கு அருமையான விலை சலுகைகளை அறிமுகப்படுத்தியும் அதன் நூற்றாண்டு நிறைவுவிழாவைக் கொண்டாடுகிறது.
எம்ஜி காமெட்இவி, எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் மாடல்களுக்கான அருமையான விலை சலுகைகளுடன் எம்ஜி இசட்எஸ்இவி காரின் புதிய டிரிம் மாடலை
நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எலக்ட்ரிக் போக்குவரத்தை அதிகரிப்பதை நோக்கிய ஒரு முக்கியபடியாக, இசட்எஸ்இவி ‘எக்ஸிகியூட்டிவ்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இவிபோர்ட்ஃ போலியோவை எளிதில் கிடைக்கக்கூடியதாக மாற்றுவதற்கும், இவிவாகனங்களை மக்கள் விரைவாக ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கார் எக்ஸிகியூட்டிவ் ரூ.18.98 லட்சம் என்ற விலைச் சலுகையில் கிடைக்கிறது.
எம்ஜி ஹெக்டர் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை ரூ.14.94 லட்சம், டீசல் வேரியண்ட்டின் விலை ரூ.17.50 லட்சம் முதல் தொடங்குகிறது.
சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள நகர்ப்புற கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக எம்ஜி காமெட் இவி-ஐ அறிமுகப்படுத்தியது. எம்ஜி காமெட்இவி-ன் விலை ரூ,6.99 லட்சம் முதல் வழங்குகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கார்களின் சிறப்பம்சங்கள் குறித்து எம்ஜி இந்தியாவின் துணை நிர்வாக இயக்குனர் கௌரவ்குப்தா விளக்கமாக எடுத்துரைத்தார்.