fbpx
Homeபிற செய்திகள்50 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனை இலக்கை எட்டிய டாடா நெக்சான் மின்சார கார்

50 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனை இலக்கை எட்டிய டாடா நெக்சான் மின்சார கார்

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரும், மின்சார வாகன பரிணாம வளர்ச்சியின் முன்னோடியுமான டாடா மோட்டார்ஸின் நெக்சான் இ.வி. 50 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.

இந்த கார் இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. நெக்சான் இ.வி. கடந்த 2020ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2021-23 இடைப்பட்ட காலத்தில் 1,500 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 6 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டாடா பயணிகள் மின்சார வாகன சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் சேவை பிரிவின் வியூக தலைவர் விவேக் ஶ்ரீவத்சா கூறுகையில், நெக்சான் இ.வி. இந்தியாவின் சொந்த மின்சார எஸ்.யு.வி.யாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4003 கி.மீ. தூரத்தை 95 மணி 46 நிமிடங்களில் (4 நாட்கள்) கடந்துள்ளது. மேலும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் சாதனை படைத்துள்ளது. சவாலான நிலப்பரப்புகள், தீவிர வானிலைகளில் டாடா நெக்சான் இ.வி. எளிதான பயணத்தை வழங்குகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img