fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் 73வது விளையாட்டு விழா கோலாகலம்

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் 73வது விளையாட்டு விழா கோலாகலம்

கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி 73வது விளையாட்டு விழா வைக் கொண்டாடியது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உடற் கல்வி துறையின் துணை இயக்குநர் டாக்டர் ஜே.பி. தேசிகா ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

காலை 9.30 மணியளவில் கொடி யேற்றத்துடன் தொடங்கிய இவ் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர் களாக கோயம்புத்தூர் மாவட்ட பளுதூக்கும் அமைப்பின் முன்னாள் செயலாளர் பி.ஆர்.முனியப்பன், கோயம்புத்தூர், மாவட்ட தடகள சங்கத்தின் மூத்த இணை செயலாளர் டி. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக கோயம்புத்தூர், நிர்மலா மகளிர் கல்லூரி, விலங்கியல் துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் பௌலின் வசந்தி ஜோசப், கல்லூரியின் இந்தித் துறையின் தலைவர் முனைவர் சுதா ஷர்மா ஆகியோர் பங்கேற்றார்கள்.

2024-2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு கோயம்புத்தூர், நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலாளர் அருட் சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், கோயம்புத்தூர், நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வர் அருட் சகோதரி. முனைவர் மேரி பபி யோலா பரிசுகளும் கேடயங்களும் வழங்கியும் விழாவிற்கு தலைமையேற்றனர்.

இவ்விளையாட்டு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அனைவருக்குமான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

படிக்க வேண்டும்

spot_img