fbpx
Homeபிற செய்திகள்கோவையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி உலக சாதனை படைத்தது

கோவையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி உலக சாதனை படைத்தது

போதைப்பொருள் விழிப்புணர்வை உலக சாதனையாக மாற்ற, கோவை மாநகர காவல் துறை மற்றும் பார்க் கல்வி நிறுவனங்கள் இணைந்து டிஜிட்டல் வடிவிலான போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை அதிக அளவில் மாணவர்களை கொண்டு ஏற்று உலக சாதனை படைத்தனர்.

இதில் மொத்தம் 1,37,294 மாணவர்களிடம் உறுதிமொழிகள் பெறப்பட்டது. அதில் 1,12,375 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. இந்த முயற்சியையும் பதிவையும் உலக சாதனை பதிவு யூனியன் ஏற்றுக் கொண்டு சாதனையாக அங்கீகாரம் அளித்துள்ளது.

தொடர்ந்து, உலக சாதனை யூனியன் பிரதிநிதி கிரிஸ்டோபர் டெய்லர் கிராப்ட், கோவை மாநகர காவல்துறை, பார்க் கல்வி நிறுவனங்களுக்கும் சான்றிதழை வழங்கினார்.

இந்த சாதனை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்ற கல்லூரிகளை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், பார்க் கல்வி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா ஆகியோர் பாராட்டினர்.

இதில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 1000 மாணவர்கள் போதைப்பொருள் இல்லாத கோவையின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img