fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஓசோடெக் நிறுவனம் தயாரிக்கும் மூன்று வகை இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்தார், மயில்சாமி அண்ணாதுரை

கோவையில் ஓசோடெக் நிறுவனம் தயாரிக்கும் மூன்று வகை இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்தார், மயில்சாமி அண்ணாதுரை

கோவையில் மேக் இன் இந்தியா தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓசோடெக் நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நீண்ட கால பலன் தரும் புதிய மூன்று இருசக்கர மின்சார வாகனங்கள் சர்வதேச அளவிலான சந்தையை குறி வைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஓசோடெக்(Ozotec) நிறுவனத்தின் தலைவர் பரதன் கூறியதாவது: – கோவையை உற்பத்தி மையமாக கொண்டு புதுமையான இயந்திர உற்பத்தியில் தனி கவனம் செலுத்திவரும் ஓசோடெக் நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

நவீன மோட்டார் வடிவமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் உற்பத்தியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் திகழும் ஓசோடெக் நிறுவனம், தறிகளுக்கான கட்டுப்பாட்டு பேனல்கள் மற்றும் மோட்டார்கள் உட்பட ஜவுளித் துறையில் பல புரட்சிகரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் ஆழமான தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, ஓசோடெக் 2018 ஆம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையில் நுழைந்தது, அதன் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாகன (EV) உற்பத்தி யில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருந்து வருகிறது ஓசோடெக்.

கொங்கு பிராந்தியம் முழுவதும் 9,000 க்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட் டர்களை விற்றுள்ள ஓசோடெக் நிறுவனம், தற்போது இந்தியா முழுவதும் தனது தயாரிப்பு விற்பனை சந்தையை விரிவுபடுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

இதன் அறிமுக விழா கோவை அரசூர் கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்றது. இந்த புதிய மின்சார வாகனங்கள் அறிமுக நிகழ்வில், புகழ்பெற்ற விஞ்ஞானியும், இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று. புதிய மின்சார வாகன மாடல்களை அறிமுகம் செய்து பேசினார். கேபிஆர் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமசாமி விழாவில் பங்கேற்றார்.

வணிக பயனர்களுக்கு, ஓசோடெக் அறிமுகப்படு த்திய பீம் வகை சிறு வணிகர்களின் அதிக விருப்பம் மற்றும் கிராமப்புற போக்குவரத்துக்கு ஏற்ற கனரக வாகனம் ஆகும். இது ஒரு கரடுமுரடான தோற்றம் கொண்ட ஸ்டைலான உலோக உடலையும் 295 கிலோ வரை எடை கொண்டுள்ளது. பீம் லைட்-அதிக வேகம் மற்றும் விரைவான சவாரி விரும்பும் பயனர்களுக்கான இலகுரக, நேர்த்தியான வாகனம்.

ஸ்கூட்டர் பிரிவில், தற்போ துள்ள ஃப்ளியோ வுடன், ஓசோடெக் மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. அல்ட்ரா வகை இளம் ரைடர்களை இலக்காகக் கொண்டது. நியோ வகை வாகனங்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருவரு க்கும் வடிவ¬ மக்கப்பட்ட அதிநவீன அம்சங்களுடன் ஒரு ரெட்ரோ பாணியிலான ஸ்கூட்டர் ஆகும்.

மேக்ஸ் என்பது கூடுதல் இடத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நவீன அழகியலுடன், வசதியான இருக்கை மற்றும் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

இந்த நவீன மின்சார ஸ்கூட்டர்களுக்கான எக்ஸ்-ஷோரூம் விலைகள் அடிப்படை மாடல்களுக்கு விலை வெறும் ரூ.37,500 ரூபாயில் தொடங்குகிறது. ரூ.49, 990 ரூபாயில் தொடங்கும் பிரீமியம் வகைகளில், 1 மணி நேர ஸ்மார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் தடையற்ற நீண்ட தூர சவாரி அனுபவத்திற்கான கான்சோ ஜிஎஸ்எம் இணைப்பு ஆகியவை இந்த வகை வாகனங்களில் அடங்கும். பீம் வகை வாகனங்களின் விலை உள்ளமைவு மற்றும் அம்சங்களைப் பொறுத்து விலை ரூ.65,990 முதல் ரூ.1,34,990 வரை இருக்கும்.

உயரிய பாதுகாப்பு, அதிக பயன்பாடு மற்றும் நவீன வடிவமைப்பை வாடிக்கையாளர்களுக்கு இவ்வாகனங்கள் முழுமையாக வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img