கடந்த 8 மாதங்களுக்கு முன்னர், கோவை பூசாகோ கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி காவல்துறையில் பணியிருப்பவர்களின் வரவு, செலவு சேமிப்பு குறித்து கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் அவர் களது குடும்பத்தினரிடையே தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்கள்.
இந்த பகுப்பாய்வு அறிக் கையில் காவலர்களின் துணையரை (மனைவி/ கணவர்) சுய தொழில் செய்ய ஊக்குவிக்கும் பட்சத்தில் அவர்களது பொருளாதாரம் உயரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் வழங்கிய அறிவுரைகளின் படி, தங்களது ஓய்வு நேரத்தில் வீட்டிலிருந்தபடியே சுயதொழில் செய்ய காவலர்களின் துணைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கோவை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் அவர்களுக்கு 20க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்புகளும், செயல்முறை வகுப்புகளும் நடத்தப்பட்டது.
இதில் சிறுதானிய ஐஸ்கிரீம், ஜாம், ஜூஸ், ஸ்குவாஷ், ஊறுகாய், சத்துமாவு, சமையலுக்கு பயன்படும் பொடிகள், பல்வேறு உணவு பொருட்கள் ஆகியவற்றினை தயாரித்தல், விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
அதன்பின்னர், கடந்த 22.12.2023 முதல் 24.12.2023 வரை கோவை மாநகர ஆயுதப் படை வளாகத்தில் நடைபெற்ற விற்பனை கண்காட்சியில் காவலர் குடும்ப பெண்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை கூடங்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்தார்கள்.
அதனை தொடர்ந்து, காவலர் குடும்பத்தினர் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய அவர்களின் நலன் கருதி கோவை மாநகர ஆயுதப்படை காவல் ஆவின் பாலகம் அருகில் ஒரு கடையும், காந்திபுரம் காவல் ஆவின் பாலகம் அருகில் ஒரு கடையும் புதிதாக கட்டப்பட்டது.
மேற்படி, இரண்டு கடைகளையும் இன்று (திங்கட்கிழமை) காலை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
மேற்படி இரண்டு கடைக லும் உணவு வகைகள், சிறுதானிய பிஸ்கட்கள், சிறு தானிய உணவு பொருட்கள், ஹோம்மேட் சாக்லெட்கள், வீட்டு முறைப்படி தயார் செய்த சூப், மசாலா பொருட்கள், எண் ணெய் வகைகள், நொறுக்கு தீனிகள், பன், ரொட்டி வகைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேசுகையில், கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் துணைவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கவும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்திலுள்ள குடிநீர் நிலையத்தில் புதிதாக பொருத் தப்பட்டுள்ள 5 ரூபாய் நாணய தானியங்கி வெண்டிங் இயந்திரத்தை துவக்கி வைத்தார். இதில் காவலர்களும் காவலர் குடும்பத்தினரும் 24 மணி நேர மும் 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம்.
மேற்படி நிகழ்ச்சியில், கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் கே.சரவணக்குமார், ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ஏ.சேகர், மோட்டார் வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் கே.கோவிந்தராஜூ, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் எம்.பிரதாப்சிங் மற்றும் இருபால் காவல் ஆளிநர்களும் மற்றும் காவலர் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டார்கள்.