கோவை பி.ஆர்.ஜெ. ஆர்த்தோ சென்டர் – எம்.ஏ.கே மருத்துவமனை சர்வதேச மகளிர் தினத்தன்று இலவச மெகா மருத்துவ முகாமை நடத்தியது. இது கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விரிவான மருத்துவ சேவைகளை வழங்கியது.
இந்நிகழ்வில், தங்கள் உடல்நலம் மற்றும் நல் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க விரும்பும் பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து கொண்டனர்.
அடிப்படை மருத்துவ பரிசோதனைகள், நிபுணர் ஆலோசனைகள், எலும்பு அடர்த்தி சோதனைகள், பல் பரிசோதனைகள், பார்வை பரிசோதனைகள் (டிரினிட்டி கண் மருத்துவமனையுடன் இணைந்து), பெண்கள் உடல்நலம் மற்றும் நல் வாழ்வு தகவல், நாள்பட்ட நோய் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த முகாம் வழங் கியது. “சர்வதேச மகளிர் தினத்தன்று நாங்கள் நடத் திய இந்த முகாமினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று மருத்துவமனையின் தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சதீஷ் குமார் கூறினார்.
“பெண்களின் ஆரோக்கியம் கருப்பையிலிருந்து தொடங்குகிறது, எனவே அவர்களின் ஆரோக் கியத்தை மேம்படுத்துவது ஆண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது” என்று பி.ஆர்.ஜெ மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஜீபுர் ரஹ்மான் கூறினார்.