fbpx
Homeபிற செய்திகள்பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தேசிய கைத்தறி தின விழா, விழிப்புணர்வு கண்காட்சி

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தேசிய கைத்தறி தின விழா, விழிப்புணர்வு கண்காட்சி

கைத்தறித்துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் உடன் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து தேசிய கைத்தறி தின விழா மற்றும் கைத்தறி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவ னமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலை யங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.

கைத்தறி ரகங்கள் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறை யினருக்கு கொண்டு செல்லும் வகை யில் கைத்தறித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

கோவையில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கல்வி நிறுவனத்தில் கைத்தறித்துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் சார்பாக கைத்தறி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பட்டுப்புடவைகள், பருத்திப் புடவைகள், புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கள், ஹோம்டெக்ஸ்டைல்ஸ் ரகங்கள், நாகரீகபைகள், துப்பட்டாக்கள், போர்வைகள், தலையணை உறைகள், துண்டுகள் முதலியன காட்சிப் படுத்தப்பட்டன.

சுமார் 1000 மாணவிகள் பங்கேற்ற இவ்விழாவில், அதிகாரிகள் ரகங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினர். விழிப் புணர்வு ஏற்படுத்தும்விதமாக வினாடி வினா போட்டியையும் நடத்தினர்.

கல்லூரி டீன் டாக்டர் சாந்தி ராதாகிருஷ்ணன், துறைத்தலைவர்கள் டாக்டர் ஆர்.ராதிகா, வி.எஸ்.கற்பகவல்லி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கைத்தறித்துறை உதவி இயக்குநர் எஸ்.சிவக்குமார், கைத்தறித்துறை அலுவலர் பி.பொம்மையாசாமி, கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் டி.நந்தகோபால், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் என்.செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மாணவிகளுக்காக 30% தள்ளுபடியில் கைத்தறித் துணிகள் விற்பனை செய்யப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img