fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் தொழில் முனைவோர் மையம் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் தொழில் முனைவோர் மையம் துவக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மையம் துவக்கப்பட்டது. இதனை எஸ்என்ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் துவக்கி வைத்தார்.

இந்த நவீன புத்தாக்க மையம், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் தொடர்ந்து கவசாகி ரோபாட்டிக்ஸ் இந்தியாவின் செமிகண்டக்டர் பிரிவின் மென்பொருள் குழுத் தலைவர் சக்தி விக்னேஷ், முனைவர் என் ஆர் அழமேலு, முனைவர் ஜே டேவிட் ரத்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பால் பேரிங் வகைப்படுத்தும் இயந்திரம், மாம்பழம் பழுக்க வைக்கும் தொழில்நுட்பம், சூரிய ஆவியாக்கி புத்தாக்கம் உள்ளிட்ட நவீன மாணவர் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

முதுகலை கருத்தரங்க அரங்கம் மற்றும் HIVE மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யுக்தி கருத்தாக்க விருதுகள் வழங்கப்பட்டதுடன், சிறப்பு HIVE துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img