கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், இந்திய அளவிலான காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் கல்வி நிறுவனத்தின் (ICAI) கோவை சாப்டரும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, கோவை சிஎம்ஏ தலைவர் ஆர்.மகேஸ்வரன், துணைத் தலைவர் சுப்ரமணியம் குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரியில் காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் துறை சார்ந்த தொழில்முறைப் பயிற்சி மையம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் மாணவிகள் பட்டப்படிப்போடு தொழில்முறைப் பயிற்சியும் பெற முடியும்.