fbpx
Homeபிற செய்திகள்கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பில் ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று நவீன அறுவை சிகிச்சை...

கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பில் ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று நவீன அறுவை சிகிச்சை கருத்தரங்கு

கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பில் வருகிற (22ம் தேதி) அவிநாசி ரோட்டில் உள்ள ஹோட்டல் ரெசிடென்சியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சியாக செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் மற்றும் தற்போதைய புதிய கருத்துகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இது குறித்து கோவை ரேக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரெக்ஸ் கூறியதாவது:-
கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களி லிருந்தும் கலந்து கொள்கிறார்கள். தங்களுடைய அறிவு, அனுபவம் மற்றும் இதில் உள்ள முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாட உள்ளனர்.

கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளாக ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி வெளிநாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் விரிவுரை நிகழ்ச்சி நடக்கிறது.

செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோ செய்யும் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சையின் நேரடி ஒளிபரப்புசெய்யப்படுகிறது
தற்போது மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நுட்பங்கள் பற்றி கலந்துரையாடல் நடைபெறுகிறது.

எலும்பியல் துறையில் உள்ள புதுமையான பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய கண்காட்சி ரோபோடிக் மூட்டுமாற்று அறுவை சிகிச்சையால் நோயாளிகள் அதிவிரைவாக, வலியின்றி குணம் அடைவதை காணலாம். சாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்து கொண்டு, விவாதித்து சரியான சிகிச்சை முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த புரிதலை சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்
மேற்கண்டவாறு டாக்டர் ரெக்ஸ் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img