கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.26க்குட்பட்ட அத்திப்பாளையம் பிரிவு ஸ்ரீராம் நகர் முதல் தெரு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சரியாக செப்பனிடப்படாததால் மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி, ரூ.50000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மாநகரப் பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவிப்பொறியாளர் திருமூர்த்தி மற்றம் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.