கோவை இன்டஸ்ட்ரியல்சிட்டி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கூட்டம் ரேஸ்கோர்ஸ் சீமா அரங்கில் நிறுவன தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. விழாவுக்கு உதவி தலைவர் டாக்டர் உமா பிரபு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி கவர்னர் டாக்டர் ராஜ்மோகன் கலந்துகொண்டு புதிய திட்ட செயலாக்கம் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் ரோட்டரி சங்க தலைவர் கனகராஜ், செயலாளர் முகமது சபி, உதவி கவர்னர் சசிகுமார், இயக்குனர் மயில்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரோட்டரி சங்க கவர்னர்
இதுகுறித்த ரோட்டரி சங்க கவர்னர் டாக்டர் ராஜ்மோகன், நிறுவன தலைவர் வழக்கறிஞர் பிரபுசங்கர் ஆகியோர் கூறியதாவது:- ரோட்டரி சங்கம் சார்பில் பெண்கள் கல்வி,, மியாவாக்கி பாரஸ்ட், ஆசிரியர்கள் கவுரவிப்பு, உள்பட 4 திட்டங்கள் செயல் படுத்தபட உள்ளது.
மேலும் கோவை அருகே தீத்திபாளையத்தில் ரூ.60 லட்சம் செலவில் டெலிமெடிசன் சென்டர் தொடங்கப்பட உள்ளது. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.