சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில்,
எம்பிஏ துறை சார்பில் மாணவர்களுக்காக சிஇஓ நிபுணர் பேச்சுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அமர்வுக்கு தலைமை விருந்தினராக ‘காபி ரெடி’யின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கீர்த்தி கலந்து கொண்டார். அவர், தனது வெற்றிப் பாதை மற்றும் ‘காபி ரெடி’யின் வெற்றியை அடைய கடந்து வந்த போராட்டங்கள்
பற்றிய அனுபவத்தை விவரித்தார்.
வணிக உலகம் குறித்தும், தொழிலில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் குறிப்புரை வழங்கினார். கேள்வி-பதில் நிகழ்ச்சியுடன் அமர்வு முடிவுக்கு வந்தது.