மாநில அளவில் நடைபெற்ற டெனிகாய்ட் இரட்டையர் போட்டியில் 3 ஆவது இடம் பெற்று கோவை மாணவிகள் சாதனைப் படைத்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி (மேற்கு) பள்ளி மாணவிகள் கெஸ்னா, காவியா ஆகிய இருவரும் மாநில அளவில் நடந்த டெனிகாய்ட் இரட்டையர் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
பள்ளிக்கும் கோவை மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்துள்ள சாதனை மாணவிகளை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்டோர் பாராட்டி உள்ளனர்.
இத்தகைய சாதனை படைப் பதற்கு உறுதுணையாக இருந்த மாநகராட்சி ஆணையாளருக்கும் அம்மாணவிகளின் குடும்பத்திற்கும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்துள்ளார்.