fbpx
Homeபிற செய்திகள்கோவையில் எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் சார்பில் "சொல் தமிழா சொல்" பேச்சுப்போட்டி

கோவையில் எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் சார்பில் “சொல் தமிழா சொல்” பேச்சுப்போட்டி

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
துவங்கியதில் இருந்து இன்று வரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது.

தமிழ்ப்பேராயம் வழி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த பல ஆயிரம் மாணவர்களைக் கொண்ட பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சாற்றலை அங்கீகரிக்கும் நோக்கத்தில் “சொல் தமிழா சொல் 2025” என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டியைத் தற்போது ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கி 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இப்பேச்சுப்போட்டி பல்வேறு கல்லூரிகளில் திட்டமிடப்படி நடைபெற்று வருகிறது.

8வது மண்டலத்திற்கான பேச்சுப்போட்டி கோயம்புத்தூர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

150க்கும் மேற்பட்ட மாணவர்கள், 6 நடுவர்கள் என பல சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் விவரம் பின்வருமாறு: முதல் பரிசு ரூ.1,00,000, ஹர்ஷிதா, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி,
இரண்டாம் பரிசு ரூ.75,000 ரேஷ்மா, பூசாகோ அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, மூன்றாம் பரிசு ரூ.50,000 தமிழவன் அரசு கலைக் கல்லூரி,
மேலும் ஆறுதல்பரிசாக 5 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம்,
இப்போட்டியில் வெற்றிபெற்றோருக்குச் சான்றிதழ்களை, தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர் நாகராசன் வழங்கினார்.

வெற்றியாளர்கள் மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கத் தகுதிபெறுவர்.

படிக்க வேண்டும்

spot_img