உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை கோவை மாவட்ட திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை திமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
வடகோவை பகுதி
அதன் ஒரு பகுதியாக கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு காந்திபுரம் பகுதி கழக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் தலைமையில் கோவை மாவட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.