fbpx
Homeபிற செய்திகள்கோவையில் அதி சொகுசான வில்லா காசாகிராண்ட் ஜுபிலண்ட் துவக்கம்

கோவையில் அதி சொகுசான வில்லா காசாகிராண்ட் ஜுபிலண்ட் துவக்கம்

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான காசாகிராண்ட், கோவையில் மெடிட்டிடெரேனியன் கட்டிடக் கலை பாணியில், முதன் முதலாக உருவாக்கப்படும் அதி சொகுசு வில்லா சமூக செயல்திட்டமான காசா கிராண்ட் ஜுபிலண்ட் என்ற பெயரில் அவிநாசி சாலையில் தொடங்குகிறது.

இச்செயல்திட்டம் 1.46 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படுகிறது. தொடக்க விலை ரூ.4.92 கோடி. 14 மிக நேர்த்தியான 3 மற்றும் 4 பிஎச்கே அதி சொகுசு வில்லாக்கள் இருக்கும்.

காசாகிராண்ட் கோவை மண்டலத்தின் செயலாக்கத் துணைத் தலைவர் பி.கே.கார்த்திகேயன் கூறியதாவது: இங்கு அமைகின்ற ஒவ்வொரு வில்லாவும் பிரிமீயர் வடிவமைப்பு மற்றும் தர அம்சங்களுடன் மிக நுணுக்கமாக திட்ட மிடப்பட்டிருக்கிறது.

இங்கு இல்லங்களை வாங்குபவர்களுக்கு உன்னதமான லைஃப்ஸ்டைலை வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கம். இந்த வில்லா வளாகத்தின் அமைவிடம், கோவை மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் எளிதான அணுகுவசதியை வழங்கும்.

வில்லா

விசாலமான லிவ்விங் ரூம், உணவருந்தலுக்கான பகுதிகளுடன் இங்கு அமையவிருக்கும் வில்லாக் கள் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையான வெளிச்சம், தாராளமான காற்றோட்டம், வீட்டிற்கு வெளிப்புற செயல்பாடுகளுக்களுக்கான 10 அடி அகல தனிப்பட்ட புல்தரை ஒவ்வொரு வில்லாவிலும் இடம் பெறுகிறது.

இது மட்டுமல்லை, இவ்வளாகத்தில் உருவாகும் ஒவ்வொரு வில்லாவும் 100% வாஸ்து முறைப்படி வடிவமைக்கப்பட்டிருப்பதால், இல்லங்களை வாங்குபவர்களுக்கு மிகவும் அற்புதமான குடியிருப்பு வளாகமாக இதனை ஆக்குகிறது.

தொடங்கப்படும் நாளில் இருந்து 24 மாதங்கள் என்ற கால அளவிற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து இந்த வில்லாக்கள், உரிமையாளர்களிடம் ஒப் படைக்கப்படும் என்றார்.

காசாகிராண்ட் ஜுபிலண்ட், உயர் நேர்த்தி அம்சங்கள் நிறைந்த மிகச் சிறந்த வில்லா சமூக வளாகமாக இருக்கும். குழந்தைகளுக்கான அறிவுத் திறன் விளையாட்டுப் பகுதி, பார்பிக்யூ ஸ்டேஷன், ஸ்டீம், சானா, உடற்பயிற்சிக் கூடம், பார்ட்டி ஹால் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் லைஃப் ஸ்டைல் வசதிகள் இடம் பெறுகின்றன.

படிக்க வேண்டும்

spot_img