fbpx
Homeபிற செய்திகள்கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை  சார்பில் சிபிஆர்  முதலுதவி பயிற்சி

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை  சார்பில் சிபிஆர்  முதலுதவி பயிற்சி

கேஎம்சிஹெச் மருத்துவமனை   தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் பொள்ளாச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பயிற்சி முகாமில்  நடத்தியது.

இதில் ஒருவருக்கு இருதய செயல்பாடு திடீரென்று நின்று விடும் பொழுது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக அவரின் அருகில் இருப்பவர்கள் தகுந்த முதலுதவி அளிப்பதன் மூலம் அவரின் உயிரை காப்பாற்ற முடியும் என்பதை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மருத்துவர்கள்   போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு செய்து காட்டினர்.

கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில்,

“ஒருவருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், அவருடன் இருப்பவர்கள் இந்த CPR என்ற முதல் உதவி செய்யும்பொழுது அவரின் உயிரை காப்பாற்றுவதற்கு அதிக வாய்ப்பாக அமைகிறது. கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனை இப்பகுதியில் ஒரு சிறந்த அவசரகால சிகிச்சை மருத்துவமனையாக செயல்படுகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img