உதகையை அடுத்த கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி மாணவர் டீ.கென்னி கிரிஸ்பின், கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல அளவிலான தடகளப் போட்டியில், போல் வால்ட் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
அவருக்கு சி.எஸ்.ஐ.கல்லூரி தாளாளர் காட்வின் ஆர். டேனியல், முதல்வர் முனைவர் பி.டி. அருமைராஜ், துறை தலைவர் முனைவர் ஆ.டேவிஸ் செல்வகுமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.