குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் பூவாணிக்குப்பம், ஆதிநாராயணபுரம், கண்ணாடி, ரெங்கநாதபுரம், சிந்தாமணிக்குப்பம், பெரியகண்ணாடி ஆகிய பகுதிகளில் மேற் கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.36 ஆயிரம் மதிப்பீட்டில் பூவாணிக்குப்பம், ஆதி நாராயணபுரம் மற்றும் கண்ணாடி பகுதிகளில் குழந்தைகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையிலும், சுற்றுப்புற சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையிலும் குழந்தை நேய உட்கட்டமைப்பு கழிப்ப¬ றகள் கட்டப்பட்டு வருகிறது.
பூவாணிக்குப்பம் பகுதியில் 100 வீடுகளு டன் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்க ப்படுகிறது. ரெங்கநாதபுரம் ஊராட்சியில் மேட்டு வெளி பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் ஓடு பதித்ததரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட 41 தொகுப்பு வீடுகள் மற்றும் 2 தனிவீடுகள் என மொத்தம் 166 வீடுகளு க்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட ஆதிநாராயணபுரம், ரெங்கநாதபுரம், கண்ணாடி பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணிகள் மற்றும் ரெங்கநாதபுரம் பகுதியில் பிரதம மந்திரி ஜன் மன் திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை தரமாக மேற்கொள்வது குறித்தும், விரைவுப்படுத்துவது குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.