-கடலூரில், தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல்
கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் தலைமையில் இரண்டு நாட்கள் அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி தேர்தல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பாக இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 மற்றும் 1951, வாக்காளர் பதிவு விதிகள் 1960,தேர்தல் நடத்தை விதிகள் 1961, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அறி வுரைகள், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் அறி வுறுத்தல்கள் மற்றும் கையேடுகள் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான பரவலாக்கப்பட்ட, வலுவான மற்றும் வெளிப்படையான சட்ட கட்டமைப்பை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரிவுகள் 325 மற்றும் 326-ன்படி 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்குசாவடியும், வாக்காளர்கள் இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீ தொலைவுக் குள்ளும், 800-1200 வரை யிலான வாக்காளர்களை கொண்டதாகவும் அமையப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1ம்தேதியை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 6ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த் தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள் தொடர் ந்து நடைபெற்று வருகிறது. எனவே, தங்கள் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் இத்தகவலை தெரிவித்து, வாக்காளர் பட்டியலில் தகுதியான நபர்களின் பெயர்களை சேர்க்கவும், இறந்தவர்கள் மற்றும் நிரந் தரமாக குடிபெயர்ந்தவர்க ளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
தங்கள் கட்சியினுடைய வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஏதேனும் மாற்றம் இருப்பின், சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் உரிய படிவத்தில் தெரிவித்திட வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருநாவுக்கரசு, தேர்தல் வட்டாட்சியர் சுரேஷ்குமார், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.