fbpx
Homeபிற செய்திகள்ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெறப்பட்ட 569 வழக்குகளுக்கு தீர்வு: கடலூர் கலெக்டர்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெறப்பட்ட 569 வழக்குகளுக்கு தீர்வு: கடலூர் கலெக்டர்

கடலூரில் செயல்படும் சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெறப்பட்ட 569 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித் துள்ளார். கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சகி ஒருங் கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு நேற்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித் யா செந் தில்குமார் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாது காப்புமையத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள் விவரம், வழக்குகளை கையாளும் விவரம், வழக்குகளின் தன்மை, பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவிகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்பது உள் ளிட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத் தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்ச கத்தின் கீழ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்களின் நலனுக்காக ‘சகி’ என்ற பெயரில் ஒருங் கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் தனிப்பட்ட இடங்கள்,பொது இடங்கள் அல்லது குடும்பங் களில் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து வகை வன் முறைகளினாலும் பாதிக்கப் படும் பெண்களை மீட்டு, சமுதாயத்தில் சிறப்பாக வாழ்வதற்கு அவசர நடவ டிக்கையாக மீட்பு பணி காவல், மருத்துவ மற்றும் சட்ட உதவி, மனநல ஆலோ சனை மற்றும் தங்கும் வசதி மாவட்ட குழந்தைகள் பாது ஆகியவை ஒரே கூரையின் காப்பு அலுவலர் சுந்தர், கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் பெறப்பட்ட 569 வழக்குகள் மீதும் நடவடிக்கை எடுக் சுப்பட்டு தீர்வு காணப்பட் டுள்ளது. அதேபோல்கலெக்டர் அலுவலகத்தில் செயல் பட்டுவரும் குழந்தைகள் உதவி மையத்தில், அங்கு வரும் அழைப்புகள் கணினியில் பதிவு செய்யப்படும் முறை தொடர்பாகவும், நிலுவை யில் உள்ள அழைப்புகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில் கடந்த நவம்பர் மாதத்தில் பெறப்பபட்ட 85 வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் சமூக நலத்துறை கண்காணிப்பாளர் சுமதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img