திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் .சார்பாக மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் இணைப்புக்கூட்டம் நடைபெற்றது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற் பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து மாவட்ட அளவிலான தொழில் முனைவோர்களுக்கான ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் வாழ்த்து காட்டு வோம் திட்டம் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் 120 வட்டா ரங்களை உள்ளடக்கி 3994 கிராம பஞ்சாயத்துகளில் சிறப் பாக செயல்பட்டு வருகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் உற்பத்தியாளர் கூட் டமைப்பு நிறுவனம், சமுதாய பண்ணை பள்ளி, சமுதாய திறன் பள்ளி என பல்வேறு சேவைகளை புரிந்து வருகிறது. இதன் ஒரு மைல் கல்லாக இந்தியாவிலேயே முதல் முறையாக சுய உதவிகுழுவின் உள்ள பெண்களை மையமாகக் கொண்டு சுயஉதவிக் குழுவை சார்ந்தோரை மையமாகக் கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 35 சதவீதம் மானியத்துடன் இணை மானிய திட்டம் என்ற ஒரு சிறப்பான முன்னோடி திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் கிராமப் புறங்களில் தொழில் முனைவோரை மிக அதிக அளவில் கண்டறிந்து அவர்களுக்கு இணைமானிய திட் டத்துடன் கடன் உதவி செய்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திவருகிறது.
கிராமப்புற பொருளாதாரமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் என்ற அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இந்த ஒரு அளப்பரிய செயல் ஒரு சிறந்த முன்னோடி திட்டமாக பேசப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத் தில் சேத்துபட்டு, வந்தவாசி, தெள்ளார், கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம், கீழ்பெண்ணாத்தூர், ஒன்றியங்களில் 308 பஞ்சாயத்து களில் இணைமானிய திட்டம் செயல்படுத்தப்பட்டு சுமார் 600 பயனாளிகளுக்கு இதன் பயன் சென்றடைந்திருக்கிறது. 12 க்கும் மேற்பட்ட வங்கிகளோடு புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்து இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 35 சதவீத மானிய தொகையை வங்கிகளின் கணக்கிற்கு முன்கூட்டியே செலுத்தப்பட்டு வங்கியின் கடன் தொகையோடு சேர்ந்து விடுவிக்கப்படுகிறது. திரு வண்ணாமலை மாவட்டத்தில் இத் தகைய ஒரு சாதனைக்கு நம்மோடு இணைந்து ஒத்துழைப்பு நல்கும் வங்கிகளின் பணி அளப்பரியது. மானியமாக மட்டுமே 600 பயனாளிகளுக்கு ரூபாய் ஐந்து கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 122 வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக நமது மாவட் டத்தில் தான் பள்ளி மாணவர்க ளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு வழங்கப்படு கிறது.
இதன்மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்கள் தரமாகவும், பாரம்பரிய முறைப்படி விற்பனை செய்து அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும்.
இக்கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட் கள் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஆலோ சனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தொழில் முனைவோர்களாக வளர்ச்சி அடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட செயல் அலுவலர் தமிழ் மாறன், அலுவலர்கள் அரசு மற்றும் தொழில்மையம் மற்றும் வல்லுநர்கள், தொழிற்சார் சமூக வல்லுநர்கள் மற்றும் மகளிர் உதவிக்குழுக்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.