fbpx
Homeபிற செய்திகள்கோவை பூம்புகாரில் ‘தீபத் திருவிழா’ விற்பனை கண்காட்சி -தொடங்கியது

கோவை பூம்புகாரில் ‘தீபத் திருவிழா’ விற்பனை கண்காட்சி -தொடங்கியது

பூம்புகார் கைவினைப்பொருட்கள் உலகில் தனியதொரு இடத்தைப்பிடித்துள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவோம், பூம்புகார் என்ற பெயரால் அழைக்கப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம், 1973ல் துவக்கப்பட்டு, தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத் துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பண்டி கைக்காலங்களில் பல்வேறு கண்காட் சிகளை நடத்தி வருவதைப்போல இந்த ஆண்டும் கார்த்திக்கை தீபத்தை முன்னிட்டு “தீபத் திருவிழா” என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த 1ம் தேதி துவக்கியது. இந்த கண்காட்சி டிசம்பர் 31ம் தேதி முடிய தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய கோவை பெரிய கடை வீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைபெறும்.
இக்கண்காட்சியினை கடந்த 1ம் தேதி கிழமை காலை 11.00 மணியளவில் கோவை எஸ்எஸ்விஎம் கல்விக்குழும நிறுவனர் & நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் பித்தளையில் செய்த விநாயகர் விளக்கு, பிரதோஷ விளக்கு, அஷ்டலட்சுமி விளக்கு, கஜலட்சுமி விளக்கு, பாலாஜி விளக்கு, விஷ்னு விளக்கு, மூகாம்பிகை விளக்கு, அருணாச்சலேஸ்வர் விளக்கு, ரங்கநாதர் விளக்கு, சங்கு சக்ர விளக்கு, சிறிய அகல் விளக்கு, அஸ்தோத்ரம் விளக்கு, காமாட்சி விளக்கு, காஞ்சி காமாட்சி விளக்கு, தாமரை பூ மாடல் விளக்கு, அன்னம் தொங்கு விளக்கு, யானை விளக்கு, விநாயகர் நின்ற நிலை விளக்கு, வாத்து மாடல் நந்தா விளக்கு, முருகன் அறுபடை விளக்கு, முருகன் விளக்கு, பித்தளை சிம்னி விளக்கு, 1 அடி முதல் 6 அடி அன்னம், பிரபை விளக்கு, மலபார் விளக்கு, கிளி தொங்கு விளக்கு, குபேர விளக்கு, நந்தா விளக்கு, பேன்சி கேரளா விளக்கு,பாலாடை விளக்கு, மூலிகையில் செய்த சங்கு விளக்கு, பஞ்ச காவிய விளக்கு, மண்ணால் செய்த விநாயகர் விளக்கு, உருளி விளக்கு, தாமரை விளக்கு, கலர் மண் விளக்கு, பீங்கான் விளக்கு என எண்ணற்ற விளக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் பல விதமான விளக்குகள் விற்பனைக்கு உள்ளன.

இக்கண்காட்சியில் விற் பனை செய்யப்படும் அனைத்து விளக்குகளுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது .அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமின்றி ஏற் றுக்கொள்ளப்படும்.
இக்கண்காட்சி மூலம் ரூ.10 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img