ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி, சிந்தி லேடீஸ் ஃபோரம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து, ‘இ வேஸ் டூ ஸ்மைல் வேஸ்’ என்ற திட்டத்தை நேற்று (நவ.22) தொடங்கி உள்ளன.
கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் தலைமை வகித்தார். காட்வின் மரியா விசுவாசம், எஸ்.என்.ஆர். அறக்கட்டளை சிஇஓ, சி.வி..ராம்குமார், சிந்தி வித்யாலயா தாளாளர் கமலேஷ் ரஹேஜா ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக பங்கேற்றனர்.
சாயிபாபா காலனியில் உள்ள ராமலிங்கம் காலனி, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இதன் தொடக்க விழா நடந்தது. மாவட்ட இயக்குனர் ஆர்.மயில்சாமி, உதவி கவர்னர் சுமித்குமார் பிரசாத், ரங்கா ஜிஜிஆர் ராகேஷ்குமார், குமார்பால் கே தாகா, அல்பேஷ் மேத்தா, திட்ட தலைவர் ரோகிணி சேத்தியா, தலைவர் நிரோவ் ஷெத், செயலாளர் கிருஷ்ணா டி.சமந்த், டைரக்டர் யூத் பிரமோத் சமர், சிந்தி பெண்கள் அமைப்பின் செயலாளர் பிரீத்தி பஞ்சாபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘இ வேஸ் டூ ஸ்மைல் வேஸ்’
‘இ வேஸ் டூ ஸ்மைல் வேஸ்’ என்பது சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்த திட்டமாகும்.
குழந்தைகளின் பல் பிரச்சனைகளைத் தடுக்கவும் சிகிச்சையும் அவர்களின் பள்ளி வளாகத்திலேயே கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் தர உள்ளனர்.
இதற்கான நிதியை கோவை காட்டன் சிட்டியின் ரோட்டரி கிளப் மற்றும் சிந்தி மகளிர் மன்றம் இணைந்து வழங்கும்.
கோவையில் உள்ள 18 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் 3 முதல் 6 மாதங்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்தப்படுத்த, மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இத்திட்டத் தின் மூலம் ஏறத்தாழ 1500 ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள்.
சமூகத்தின் எதிர்காலத்திற்கு வாழ்நாள் முழுவதும் புன்னகையை வழங்குவதற்காக இந்த அளவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய பல் மருத்துவ திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.