fbpx
Homeபிற செய்திகள்ரத்த பரிசோதனை மையத்தை திறந்து வைத்த துணை மேயர்

ரத்த பரிசோதனை மையத்தை திறந்து வைத்த துணை மேயர்

கோவை கரும்புக் கடைப் பகுதியில் நவீ னப்படுத்தப்பட்ட லைஃப் ஜோன் இரத்தப் பரிசோ தனை மையத்தை கோவை துணை மேயர் திறந்து வைத்தார்.

கோவை கரும்புக் கடைப் பகுதியில் எளிய மக்களுக்கு மருத்துவ சேவையை மிகக்குறைந்த விலையில் செய்துவரும் லைஃப் ஜோன் இரத்தப் பரிசோதனை மையம் தற்போது புதிய Hematology இயந்திரங்களோடு நவீனப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீனப்படுத்தப்பட்ட இரத்தப்பரிசோதனை மையத்தை கோவை மாநகர துணை மேயர் ஆர்.வெற்றிச்செல்வன் நேற்று (13 ம் தேதி) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வு ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர தலைவர் ஜனாப். உமர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஜமாஅத்தின் கோவை பெருநகரச் செயலாளர் ஜனாப். சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப். அப்துல் ஹக்கீம், 86 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜனாப். அஹமது கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img