fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு கல்லூரியில் பார்வையற்ற மாணவர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்கம்

கோவை அரசு கல்லூரியில் பார்வையற்ற மாணவர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்கம்

கோவை புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் ஹெல்ப் தி ப்ளைண்ட் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து பார்வையற்ற மாணவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் கணிணி மற்றும் ஆங்கில மொழி திறன் பயிற்சி காரணமாக பார்வையற்ற மாணவர்கள் பலர் முன்னனி நிறுவனங் களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இது குறித்து புரூக் பீல்ட்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலர் அஸ்வின் பாலசுப்ரமணி யம் மற்றும் ஹெல்ப் த ப்ளைண்ட் பவுண்டேஷன் அமைப்பின் அறங்காவலர் நடராஜ் சங்கரன் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஐந்து வருடங்களாக மதுரை மற்றும் கோவை யில் பார்வையற்ற மாணவர் களின் நலன் கருதி, பல் வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம்.

குறிப்பாக பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளால், பல்வேறு முன்னனி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

மேலும் புருக்பீல்டு நிறுவனத்தின் பங்களிப்பு டன் கோவை அரசு கலை கல்லூரியில் பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவங்கி உள்ளது. இதன் வாயி லாக பார்வையற்ற மாண வர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கான வேலை வாய்ப்பை பெற்று வாழ் வியல் வெற்றிகளை பெற புரூக் பீல்ட்ஸ் நிறுவனம் உதவி புரிவதாக கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img