fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் சாலை பாதுகாப்பு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

தர்மபுரியில் சாலை பாதுகாப்பு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் டீம் சார்பில் சாலை பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி ஓசூரில் இருந்து பல்வேறு நகரங்கள் வழியாக ஏற்காடு வரை செல்கிறது.

இதில் ரோட்டரி சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று தர்மபுரி வந்தது. அவர்களுக்கு 4 ரோட்டில் தர்மபுரி ரோட்டரி சங்கம், ரோட்டரி மிட்டவுன் சங்கம், ரோட்டரி எலைட் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர்கள் மாரியப்பன், கணேஷ், விஜய் சங்கர், முன்னாள் துணை கவர்னர்கள் கண்ணன், விக்ரமன், கோவிந்தராஜன் மற்றும் சங்க செயலாளர்கள், பொருளாளர்கள், முன் னாள் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேரணி நடைபெற்ற வழியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img