fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி அரசு சட்டக்கல்லூரியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க, ஊக்குவித்தல் நிகழ்ச்சி

தர்மபுரி அரசு சட்டக்கல்லூரியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க, ஊக்குவித்தல் நிகழ்ச்சி

தர்மபுரி அரசு சட்டக் கல்லூரியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைத் திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இளம் வழக்காடிகளை ஊக்குவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாடு, தொண்டு நிறுவனங்களான தோழமை, சிசிஆர்டி மற்றும் யூனிசெஃப் ஆகியவற்றின் உதவியோடு தர்மபுரி சட்டக் கல்லூரி நிர்வாகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. தர்மபுரி சட்ட கல்லூரி முதல்வர் சிவதாஸ் வரவேற்புரை ஆற்றினார்.

தோழமை தொண்டு நிறுவனம்

தோழமை தொண்டு நிறுவனத்தின் தேவநேயன் அறிமுக உரையாற்ற, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் துறை தலைவர் டாக்டர் லூர்துசாமி, தர்மபுரி சிறார் நீதி வாரியத்தின் உறுப்பினர் சரவணன், சென்னை சிசிஆர்டி நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டிக்னா ஜென்சி, தர்மபுரி ரியல் பவுண்டேஷன் நிறுவனத்தின் இயக்குநர் செந்தில் ராஜா, தர்மபுரி சிறார் பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி சிசிஆர்டி நிறுவனத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி மற்றும் பூரணி ஆகியோர் விழிப்புரையாற்ற, சிறார்களுக்கான சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் சுபா தென்பாண்டியன் விளக்கி கூறினார்.

இறுதியில் தர்மபுரி சட்ட கல்லூரியின் உதவி பேராசிரியர் ரேகா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img