fbpx
Homeபிற செய்திகள்புதிய அங்கன்வாடி கட்டும் பணி- தருமபுரி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புதிய அங்கன்வாடி கட்டும் பணி- தருமபுரி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சி, இலக்கியம் பட்டி அரசு தொடக்கப் பள்ளி அருகில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கும் பணியை எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பொறுப்பு ஜெயந்தி, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியா, குழந்தைகள் வளர்ச்சி தொகுதி மேற்பார்வையாளர் தமிழ்மணி, பாமக மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் இளங்கோ, அங்கன்வாடி பணியாளர் சுமதி, நதியா நிர்வாகிகள் செந்தில், விஜி, திருமூர்த்தி, ராஜா, ரவி, குட்டிமயில், மகேந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img