தமிழகம் முழுவதும் கேரள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்த பண்டிகை சிறப்பாக கொண் டாடப்பட்டது. தர்மபுரி பகுதியில் உள்ள கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவையொட்டி கேரள மக்கள் புத்தாடை அணிந்து அவரவர் வீடுக ளில் சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் படையலிட்டு வழிபட்டனர்.
வீடுகளில் பெண்கள் விதவிதமான பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேரள விருந்து அளித்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.