சென்னை, ராயபுரத்திலுள்ள எம்.வி டயாபடிஸ் மற்றும் புரொபசர் விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட 39வது, புரொபசர் விஸ்வநாதன் பேருரையை இங்கிலாந்தின் என்.எச்.எஸ் பவுண்டேஷன் டிரஸ்ட், டெர்பி மற்றும் பர்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மருத்துவ இயக்குநர் புரொபசர் டாக்டர். பிரான்சிஸ் கேம் வழங்கினார்.
தமிழ்நாடு டாக்டர். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சென்னை ராயபுரத்திலுள்ள எம்.வி. டயாபடிஸ் மருத்துவமனை & புரொபசர் விஸ்வநாதன், நீரிழிவு ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், தலைமை மருத்துவருமான டாக்டர். விஜய் விஸ்வநாதன், மற்றும் அதன் டீன் டாக்டர் நரசிங்கன் மற்றும் இணை டீன் டாக்டர். ஜெயஶ்ரீ கோபால் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
நீரிழிவு சிகிச்சை பராமரிப்பு மீது நீரிழிவு ஆய்விற்கான ஆராய்ச்சி சங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு வெள்ளை அறிக்கை இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இதில் புரொபசர் டாக்டர். பிரான்சிஸ் கேம், நீரிழிவின் காரணமாக காலின் கீழ்ப்புற பகுதிகளை வெட்டி அகற்றுவதை தடுப்பது குறித்து பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவில் நீரிழிவு சிகிச்சையில் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை உயர்த்துவதில் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றன என்று டாக்டர். விஜய் விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
நீரிழிவு சிகிச்சை பராமரிப்பில் ஒரு முழுமையான, ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையை ஆர்.எஸ்.எஸ்.டி.ஐ அவசியமானதாக கருதுகிறது என்று டாக்டர். விஸ்வநாதன் கூறினார்.