fbpx
Homeபிற செய்திகள்ஜனவரி 10, 11ம் தேதிகளில் கார்மல் கார்டன் பள்ளியில் வைர விழா

ஜனவரி 10, 11ம் தேதிகளில் கார்மல் கார்டன் பள்ளியில் வைர விழா

கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா கொண்டாட்ட நிகழ்வு குறித்து பள்ளியின் தாளா ளரும் முதல்வருமான அருள் தந்தை ஆரோக்கிய தடயூஸ் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் நந்தகுமார் ஆகியோர் கூறியதாவது:

கடந்த 1964-ம் ஆண்டு கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் ஹயர் செகண்டரி ஸ்கூல் துவங்கப்பட்டது. தற்போது 2024 – 2025-ம் ஆண்டு வைர விழா கொண்டாடப்பட உள்ளது.
வரும் ஜனவரி 10-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் வைர விழா கொண்டாட்ட துவக்க நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இப்பள்ளியின் தலைவரும் கோயம்புத்தூர் பிஷப்புமான டாக்டர் எல். தாமஸ் அக்வினாஸ் கலந்து கொண்டு விழா நிகழ்ச்சிகளை துவக்கி வைக்கிறார்.

கௌரவ விருந்தினர்களாக கோயம்புத்தூர் விகார் ஜென்ரல் எஸ். ஜான் ஜோசப், கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளர் மற்றும் முதல்வர்கள், ஸ்விட்சர்லாந்து, ஜெனிவா, உலக சுகாதார அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ள எமது பள்ளியின் முன் னாள் மாணவர் டாக்டர் மாதவா ராம் பால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றார்கள்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலை வர் நந்தகுமார், செயலாளர் ராஜ்குமார் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
11-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவிற்கு பள்ளி கல்வி துறை இயக் குனர் டாக்டர் எஸ். கண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் கௌரவ விருந்தினராக முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி மற்றும் மாவ ட்ட தனியார் பள்ளி கல்வி அதிகாரி புனிதா அந்தோணியம்மாள் ஆகியோர் கலந்து கொள்கி றார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் ஆசிரியர்கள் ஜோ தனராஜ், சாதானந் தம் மற்றும் மைக்கேல் சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img