நாமக்கல் மாவட்டம் சேந்தமங் கலம் வட்டம் பேளுக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மிளகு பதப்படுத்தும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் உமா பார்வையிட்டு செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட் சித்தலைவர் உமா செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
வேளாண் நிதிநிலை அறிக்கை (2021-22ம் ஆண்டு) மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதன் அடிப்படையில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விற்பனைக்குழு நிதியின் கீழ் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் சேந்தமங்கலம் வட்டாரம், பேளுக்குறிச்சி கிராமத்தில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
கொல்லிமலை வட்டாரத்தில் 2623 ஹெக்டேர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு 2623 மெ.டன் உற்பத்தி செய்யப்பட்டு உற்பத்தி சந்தை உபரி 2595 மெ.டன் ஆக உள்ளது. இம்மையத்தில் உள்ள 6 மெ.டன் மிளகு உலர்திறன் கொண்ட சூரிய ஒளி கூடார உலர்த்தி மூலம் ஒரு சமயத்தில் 3000 முதல் 6000 கிலோ வரை மிளகினை 3 நாட்களுக்குள் உலர்த்தலாம். இவ்விதமாக மாதமொன்றுக்கு 30 முதல் 60 மெ.டன் மிளகினை உலர்த்த வசதி செய்யப்பட்டுள்ளது.
உலர்த்தப்பட்ட மிளகினை 100 மெ.டன் கொள்ளளவு கொண்ட பரிவர்த்தனைக் கூடத்தில் சேமித்து வைக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின்வசதிக்கென மின் ஆக்கி (ஜெனரேட்டர்) வசதியுடன் 96 ச.மீ பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்மையத்தை, இப்பகுதி மிளகு உற்பத்தி செய்யும் விவசாயிகள், உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் உணவு பதப்படுத்துபவர்கள் ஆகியோர் வருடாந்திர குத்தகை அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும் வாட கையினை செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம்.
கொல்லிமலை பகுதி விவசா யிகளுக்கு முதன்மை செயலாக்க வசதியை வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வணிக செயல்பாடுகளை மேம்படுத்துதல், மதிப்புக்கூட்டப்பட்ட மிளகு விற்பனை மூலம் கூடுதல் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறுதல், வருமான உயர்வின் அடிப்படையில் பழங்குடியின விவசாயிகளின் சமூக மற்றும் பொருளாதார நிலையயை மேம்படுத்துதல் ஆகியவை இம் மையத்தின் குறிக்கோள்கள் ஆகும்.
எனவே விவசாயிகள் இம்மை யத்தினை பயன் படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம் படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.