fbpx
Homeபிற செய்திகள்அன்னூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

அன்னூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலகம், கால்நடை மருத்துவமனை, கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அன்னூர் வட்டாட்சியர் யமுனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, ரவீந்திரன், உதவி பொறியாளர்கள் சந்திரகலா, தங்கமணி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, உதவி பொறியாளர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பதிவறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அங்குள்ள பொது இ சேவை மையம், ஆதார் மையம், ஆகியவற்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டு, சான்றிதழ்களை பதிவு செய்ய தினந்தோறும் வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை கேட்டறிந்தார்.
மேலும் அவ்வலுவலகத்தை, சுற்றியுள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணக்கர்களிடம் கேள்விகளை கேட்டும் படிக்க வைத்தும் மாணாக்கர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து,பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் மாணக்கர்களின் எண்ணிக்கை கேட்டறிந்ததுடன், பள்ளியில் மாணக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு, அதன் சுவை குறித்து பரிசோதித்தார். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அன்னூரில் உள்ள கால்நடை மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்தும், சிகிச்சைக்கு தேவையான மருந்துகளின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் அடையாள அட்டை பதிவு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வடக்கலூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சிவகாமி வேலுச்சாமி மற்றும் செல்வி கந்தசாமி ஆகிய பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வீட்டின் அளவுகள், பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தார். வடக்கலூர் ஊராட்சியில் இத்திட்டத்தின் கீழ் 22 வீடுகள் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img