fbpx
Homeபிற செய்திகள்சிவகாசி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிவகாசி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிவகாசி மாநகராட்சி மற்றும் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகாசி மாநகராட்சி, பெரியார் காலனியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் தேசிய நகர்ப்புற சுகாதார பணியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும், கவிதா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் விளையாட்டுக்களம் அமைக்கப்பட்டு வருவதையும்,
விருதுநகர் திருத்தங்கல் சாலையில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க
மையத்தில் சேரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும்
அதற்கான இயந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள், ரப்பர், நெகிலி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து,
சிறப்பு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், அண்ணாமலை நாடார் உண்ணாமலை மேல்நிலைப்பள்ளியில் ரூ.56 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், திருவில்லிபுத்தூர் நகராட்சி மஜீத் நகர் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தையும், திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட மருத்துவர் காலனி திஷிஜிறி வளாகத்தில்,
நூலகம் மற்றும் அறிவுசார் மையம்
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், ரூ.42.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.

மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த செய்தியாளர் பயணத்தின் போது, சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, திருவில்லிபுத்தூர் ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img